Wednesday, December 9, 2009

http://www.4sh ared.com/file/14 9926378/e93402a2 /PonMozhi_ 31.html


தமிழ் கிளிப்பார்ட்டுக் கள்

ஒன்றை கவனியுங்கள். இங்கு Clipartpart1, Clipartpart2, Clipartpart3 என்று இருப்பவற்றை அனைத்தையும் பதிவறிக்கி ஒரு போல்டரி
போல்டரினுள் சேமித்தபின்பே Extract செய்து unzip செய்து கொள்ளுங்கள்
 தமிழ் எழுத்துருக்கள்
இதனைச் சொடுக்க முடியவில்லை என்றால், copy & paste செய்யலாம்
http://www.4shared.com/get/145307889/b1b9bc0d/627_Tamil_Fonts.html;jsessionid=EF20D7B9764FF7D445DBD63912706585.dc137
 
பின்வரும் தொடுப்பில் தமிழ் எழுதியையும் தமிழ் எழுத்துறு மாற்றியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் எழுதியில் உங்களுக்கு விருப்பமான விசைப் பலகை அமைப்பில், விருப்பமான எழுத்துக் குழுவில் டைப் செய்யலாம். தொடக்கக் கால பயனர்களுக்குச் செயலியை செட்டிங் செய்து கொள்வது சிறமமாக இருக்கலாம்.
http://software.nhm.in/

http://software.nhm.in/




Saturday, August 15, 2009

எமது மொழி பெயர்ப்பு, டைப்செட்டிங் சேவை

வணக்கம். கடந்த காலங்களில் தாங்கள் வழங்கி வந்த அளப்பறிய ஆதரவினால் எமது மொழி பெயர்ப்பு மற்றும் டைப்செட்டிங் சேவை வளர்ச்சியடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளர்ச்சியின் நிமித்தம், நமது சேவையைக் கடந்த 01.07.2009ல், வர்த்தக ஆணையரிடம் பதிவு செய்து விட்டேன். வர்த்தக ரீதியான சேவைக்குப் பின் வரும் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்பு 1 ஏ4 அளவு 30.00 ரிங்கிட்
டைப் செட்டிங் 1 ஏ4 அளவு 7.00 ரிங்கிட்

பொதுவாக, நமது சேவையை நாடும் பெருமக்கள், இதற்குத் தொடர்புடைய மற்ற சேவைகளையும் நாடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலைகளில், நாம் அந்த தொடர்புடைய சேவைகளை இலவசமாக வழங்குகிறோம். உதாரணமாக, உங்களுக்கு ஒரு விளம்பரப் பத்திரிகை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டு, டைப்செட்டிங் செய்வதோடு, அதனை 1000 பிரதிகள் எடுக்க வேண்டுமெனிறால், அதனை நானே அச்சு நிறுவனத்திற்கு அனுப்பி விடுவேன். அந்தப் பிரதியெடுப்புச் செலவை (பிரிண்டிங்) தாங்களே ஏற்க வேண்டும் என்றாலும், இந்தச் சேவைக்காகக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதன் மூலம் உங்கள் அலைச்சல் நேரம் மிஞ்சும்.

சில தரப்பினர், தங்கள் வர்த்தகத்தைத் தொடங்கும்போது, தங்கள் விளம்பரப் பலகையில் தமிழை ஏற்றுவதற்குச் சிரமப்படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், தமிழ் எழுத்து வடிவங்களையும் வழங்கி வருகிறோம். நம்மிடம் சுமார் 800 விதமான தமிழ் எழுத்து வடிவங்கள் உள்ளன. உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் எழுத்து வடிவங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வேறு சிலர், தங்கள் வர்த்தகத்திற்கான சின்னத்தை உருவாக்குவதில் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கும் தகுந்தஆலோசனைகளையும் வர்த்தக சின்னத்தையும் வடிவமைத்துக் கொடுக்கிறோம்.

ஆவணங்களைச் சீன மொழிக்கு மாற்றும் சேவையையும் நாங்கள் வழங்குகிறோம். மொத்தத்தில் இந்நாட்டின் புழக்கத்தில் உள்ள 4 மொழிகளிலும் மொழி பெயர்க்கும் சேவையை நாம் வழங்கி வருகிறோம்.

தங்கள் சேவையில்,



(வி.பி. ஜான்சன் விக்டர்)